Thursday, April 18, 2024

நம் காதல்

நம் காதல்.....

உன் கண்களின் தேடல் 
என் காதலின் பாடல்

உன் நெஞ்சின் தவிப்பு 
என் மனதின் பூரிப்பு

உன் மௌனம்
என் மொழி......

உன் பேச்சு
என் கவிதை
 
உன் விழி பாஷை
என் வாழ்வின் பூரணம் 
 
என்னுள் நீ நுழைந்து 
உன்னுள் நான் உணர்ந்தேன் 

நம் காதலை.....

Monday, April 1, 2024

ஏக்கம்


                        ஏக்கம்

ஏக்கங்கள் பல
என்னுள் இருக்கு
எதையும் வெளிப்படையாக
எப்பொழுதும் பேசியது இல்லை....

ஏன் பேசவில்லை
எனக்கே புரியவில்லை...

ஏன் என்றால் தெரியவில்லை....

என்ன வேண்டும் 
என்று கேட்கவில்லை...

ஏன், என்னாச்சு 
என்று வினவ வில்லை....

எப்படிச் சொல்ல 
எதையும் யாரும்
என்னிடம் கேட்காமல்.....

என் தேவை 
என் எதிர்பார்ப்பு 
எல்லாம் சிறியது.....

எதையும் எப்போதும் 
எதிர்பார்க்க மாட்டேன் என
எளிதாக சொல்லி விடுவேன்....இருந்தும்
எதிர்பார்க்கும் மனதை
எதைச் சொல்லி
எனை காக்க
ஏமாற்றத்தில் இருந்து.....

எதுவோ ஒன்று
என்னுள் பிசைய 
என்ன வேண்டும் 
எனக்கே தெரியவில்லை....
எனக்குள் 
எதையோ தேடி பார்க்கிறேன்.....

எப்பொழுதாவது 
என்ன வேண்டும் ?
என்று கேட்டு விடேன்....
என்னவனே .......
ஏக்கமே இதுவாக இருக்க 
என் செய்வேன் நான்????

அறம்

                     அறம்

அன்பாய் பேசுவதே
அறம்.....
அடுத்தவர்களையும் புரிந்து கொள்வதே அறம்....
ஆதரவாய் நிற்பதே 
அறம்....
அனுசரித்துப் போவதும் அறமே.....
அரவணைத்துச் செல்வதும் அறம்....
அகத்தில் நிதானமாக இருப்பது அறம்....
அறத்துடன் இருப்போம் அனைவரிடத்திலும்....

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...