Saturday, May 25, 2024

கவிதைச் சண்டை.....



💞💞💞💞💞
சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்...
,💜💜💜💜💜💜💜
அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்....
ஆனால்
அவன் பேசாமலே என்னை அழ வைத்து கொண்டு இருக்கிறான்.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இருவரும் பேசிக் கொள்ளாத நேரங்களில் 
எங்களின் மௌனம் பேசிக் கொள்கிறது....
💙💙💙💙💙💙💙
எதிர் பார்த்ததை செய்ய வில்லை என்று கோவம் கொள்ள வில்லை 
எதிர் பாக்க வைத்து விட்டாயே என்று தான் கோபம்.... 
💟💟💟💟💟💟💟💟

பேசிக் கொள்ளாத போது என்னை நினைத்துக் கொள்வாயா?????
நினைத்து கொண்டு இருப்பதினால் தான் பேசாமல் இருக்க முடியுது...... 

🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
பேசி தீர்த்துக் கொள்ளலாம் கோபங்களை என்றேன்....
தீர்க்கமாய் பேசியதால் தான் கோவம் என்கிறாய்....
💛💛💛💛💛💛💛💛

சண்டை போட்டு பேசாமல் போகிறாய் நீ
பேசுவதற்காகவே சண்டை போடுகிறேன் நான்......💚💚💚💚💚💚💚

Tuesday, May 14, 2024

ஏமாற்றம்

பிறப்பில் ஆரம்பித்த ஏமாற்றம்
பெண் பிள்ளையாக 
பிறந்து 
பெற்றவர்களின் ஏமாற்றம்....
பிடித்த படிப்பை 
படிக்க விடாத பெற்றவர்கள் மீது
பிள்ளைகள் ஏமாற்றம்....
பழகிய நட்புக்களின் 
பிரிவினை ஏமாற்றம்.....
பிடித்த வேலை கிடைக்காமல் 
பழகிக் கொள்ள வேண்டிய 
பாதி வாழ்க்கை ஏமாற்றம்....
எதிர் பார்ப்பை வைத்துக் கொள்ளாதே....
ஏமாற்றம் தான்.....
எதையும் எதிர்க் கொள்....
எப்பொழுதும் அன்புடன்....
எதுவும் கடந்து போகும்......

கவிதைச் சண்டை.....

💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...